2000ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க நகர மற்றும் கிராம திட்டமிடல் (திருத்தச்) சட்டம் 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. அத்துடன் முன்னைய நகர மற்றும் கிராம திட்டமிடல் திணைக்களத்திற்குப் பதிலீடாக தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்தை ஸ்தாபிப்பதற்கு உத்தியோகபூர்வ அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த திருத்தத்திற்குத் தேவைப்பட்ட உரிய நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களம் (NPPD) 2001 மே மாதம் 21ஆம் திகதி நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் பொது பயன்பாடுகள் அமைச்சினால் முன்னர் அமைக்கப்பட்டு  திறந்துவைக்கப்பட்டது. அதன் நோக்கம் சட்டத்தின் பாயிரத்தில் விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கையைத் தயாரிப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் அதிகாரம் அளித்தல்: இலங்கையில் காணிகளின் சமூக, பொருளாதார, பௌதிக மற்றும் சூழலியல் விடயங்களை ஒருங்கிணைத்து திட்டமிடுவதை ஒழுங்குமுறைப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு தேசிய பௌதிக திட்டங்களைத் தயாரித்து அமுல்படுத்துதல்: இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த கட்டிடக்கலை நுணுக்கமுள்ள கட்டிடங்கள், இயற்கை அழகுள்ள இடங்கள் என்பவற்றைப் பாதுகாத்தல்: மேற் குறிப்பிட்ட விடயங்களுடன் தொடர்புடைய அல்லது தற்செயலாக நிகழக்கூடிய அத்தகைய திட்டங்களை வலுப்படுத்துவதற்காக காணிகளைப் பொறுப்பேற்பதற்கு வசதிகளை ஏற்படுத்துதல்.

5 வது மாடி,
செத்சிறிபாய,
பத்தரமுல்ல,
இலங்கை.

தொலைபேசி : +94 115 550 601
தொலைநகல் : +94 112 872 061
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இணையதளம் : www.nppd.gov.lk
FaLang translation system by Faboba