நகர அபிவிருத்தி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரால் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் சமூக பொருளாதார மற்றும் பௌதிக அபிவிருத்தியை அமுல்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த திட்டமிடலை மேம்படுத்தும் நோக்கில் 1978ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின்மூலம் நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) ஸ்தாபிக்கப்பட்டது. அதற்கு அமைவாக நாட்டின் நகர அபிவிருத்தியைத் திட்டமிடும் மற்றும் அமுலாக்கும் பிரதான முகவராக செயற்படுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வலுவூட்டப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களும் செயற்பாடுகளும் கீழே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன:

 • பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி திட்டங்களைத் தயாரிப்பதைப் பொறுப்பேற்றல் மற்றும் பிரதான முதலீட்டுத் திட்டங்களைப் பொறுப்பேற்றல்.
 • அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களையும் அபிவிருத்தி கருத்திட்டங்களையும் நிறைவேற்றுதல்.
 • நகர காணி பயன்பாட்டுக் கொள்கையைத் தயாரித்து அமுலாக்குதல்.
 • அபிவிருத்தி கருத்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக எந்த நபருடனும் ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளுதல்.
 • எந்த நபராவது நிறைவுசெய்யத் தவறும் ஏதேனும் கருத்திட்டங்களைப் பொறுப்பேற்று நிறைவுசெய்தல்.
 • பிரதான மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்குதல், நகர காணி பயன்பாட்டு கொள்கையை உருவாக்கி அமுல்படுத்துதல்.
 • சூழலியல் தரங்களை விருத்திசெய்தல் மற்றும் சூழலியல் மேம்பாட்டு பணிகளைத் தயாரித்தல்.
 • கட்டிட பொறியியலையும் ஏனைய செயற்பாடுகளையும் மேற்கொள்தல் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியுடன் சம்பந்தப்பட்ட பணிகளைப் பொறுப்பேற்றல்.
 • அசையும் அல்லது அசையா ஆதனங்களைப் பெற்றுக்கொள்தல் மற்றும் தக்கவைத்துக்கொள்தல் அல்லது அசையும் அல்லது அசையா ஆதனங்களின் உடமையகற்றல்.
 • வீடமைப்பு திட்டங்களை உருவாக்கி நிறைவேற்றுதல், சேரி மற்றும் குடிசை வீடுகள் உள்ள பிரதேசங்களை வெளியாக்குதல் மற்றும் அத்தகைய பிரதேசங்களை அபிவிருத்திசெய்வதற்குப் பொறுப்பேற்றல்.
 • அபிவிருத்தி கருத்திட்டங்களைத் தயாரித்தல் அல்லது ஏனைய அரச முகவர் நிலையங்களுக்குத் தேவையெனக் கேட்கும் பணிகளைத் திட்டமிடல் மற்றும் அத்தகைய பணிகளை மேற்பார்வைசெய்தல் அல்லது இணைப்பாக்கம் செய்தல்.
 • ஏதேனும் அரச முகவர் நிலையங்களின் திட்டங்களின் அல்லது கருத்திட்டங்களின் அபிவிருத்தியை அங்கீகரித்தல் அல்லது இணைப்பாக்கம் செய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்.
 • ஏனைய அரச நிறுவனங்களின் நன்மைக்காக தொழில்நுட்ப திட்டமிடல் சேவைகளை வழங்குதல்.
 • ஏதேனும் அரச முகவர் நிலையங்களின் சார்பில் ஆலோசனை சேவைகளைப் பொறுப்பேற்றல் மற்றும் அத்தகைய கருத்திட்டங்களின் அல்லது திட்டங்களின் நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்துதல்.
 • வழங்குகின்ற ஏதேனும் சேவைகளுக்கு அல்லது கட்டிடங்களுக்கு வாடகை அல்லது கட்டணங்களை அறவிடல்.
 • பொறுப்பேற்கின்ற வேலைகளுக்கு மானியங்களை கொடைகளை அல்லது நிதி உதவிகளை ஏற்றுக்கொள்ளுதல்.
6 வது மற்றும் 7 வது மாடி
"செத்சிரிபாய"
பத்தரமுல்ல.
இலங்கை.
தொலைபேசி : +94 112 875 916 to +94 112 875 920, +94 112 873 644, +94 112 873 647,
+94 112 873 649, +94 112 873 651, +94 112 873 652, +94 112 875 333
தொலைநகல் : +94 112 873 637
  மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
  இணையதளம் : www.uda.gov.lk
FaLang translation system by Faboba