hon-rupasingheபொறியியலாளர் திரு. என். ரூபசிங்க
மாநகர மற்றும் மேல்மகாண அபிவிருத்தி செயலாளர்

இலங்கை பிரசைகளுக்கு குறிப்பாக மேல்மாகாண பிரசைகளுக்கு போக்குவரத்து, மின்சாரம், நீர் வழங்கல், வீடமைப்பு, சுகாதாரம், கல்வி போன்றவைகளில் உயர்ந்த தரமான சேவைகளை வழங்குவதன் மூலம் நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டு மாநகர மற்றும் மேல்மகாண அபிவிருத்தி அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டது. சூழல் மாசடைதல், போக்குவரத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் என்பவற்றைக் குறைப்பதற்கும் அரச மற்றும் தனியார் துறையின் செயலூக்கமுள்ள பங்கேற்புடன் இயற்கை வளங்களை அறிவுபூர்வமாக முகாமைப்படுத்தி ஏழை பணக்காரர் ஆகியோருக்கு சம சந்தர்ப்பம் அளித்தலை உறுதிப்படுத்துவதற்கும் நியாயமான நகர அபிவிருத்திக்காக  அமைச்சு செயலாற்றும். 'நேர்த்தியான நகரம்' என்ற சொல் கடந்த காலங்களில் பல கலந்துரையாடல்களை உருவாக்கியிருந்தது. அத்துடன் அரசாங்கம் நாட்டுக்கு நேர்த்தியான நகரங்களை அறிமுகப்படுத்துவதற்கு அதன் திட்டங்களை வெளியிட்டது. அது நாட்டுக்கு, குறிப்பாக மேல் மாகாணத்திற்கு அதிக நன்மைகளையும் பெறுமதியையும் கொண்டுவரும். அரசாங்கம் மாநகரத்தை அமுல்;படுத்துவதற்குப் புதிய திட்டத்தைக் கொண்டுவந்தது: 1990ஆம் ஆண்டு முதலாவதாக எடுத்துக்காட்டப்பட்ட எண்ணக்கரு மீண்டும் 2004ஆம் ஆண்டு பிரேரிக்கப்பட்டது. இது மேற்கு பிராந்திய மா-நகர திட்டமாகும். இந்த திட்டம் முழு மேல்மாகாணத்தையும் கொழும்பையும் மேம்படுத்துவதற்கும் தெற்காசிய பிராந்தியத்தில் சிறந்த நகரமாகவும் பொருளாதார மையமாகவும் மாற்றுவதற்கும் உதவும்.

அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்காக வினைத்திறன் மிக்க தீர்வுகளையும்  உயர்;ந்த தரத்திலான வியாபார தொழில் முயற்சிகள் உள்ளிட்ட உயர் தரத்திலான சேவைகளை மாநகரம் அதன் பிரசைகளுக்கு வழங்கும். ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து முறைமைகள், உரிய நேர போக்குவரத்து முகாமைத்துவம், நேர்த்தியான  வலுசக்தி கம்பி முறைமைகள், நேர்த்தியான தெருவிளக்கிடல், நேர்த்தியான வாகன தரிப்பிடம், நகர பராமரிப்பு தொழில்நுட்பம் மற்றும் ஏனைய பல நவீன தொழில்நுட்பங்கள் என்பவை தொழில்முயற்சிகளால் கூட்டிணைக்கப்படும். அவை நேர்த்தியான நகர பிரதேசத்திற்குள் இயங்கும் அல்லது சேவைகளை வழங்கும். இக் கருத்திட்டம் அடுத்த 15 ஆண்டுகளுக்கு இலங்கையின் மிகப்பெரிய கருத்திட்டமாகத் திகழும். மேலும், நாட்டின் பொருளாதாரத்தை சகலநிலைகளிலும் பலப்படுத்துகின்ற அதேவேளையில் உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகள் மத்தியில் இலங்கையும் நிலையாக இருக்கும்.

நகர அபிவிருத்தியுடன் இணைக்கப்பட்ட நகர உட்கட்டமைப்பு அபிவிருத்தி அதற்கு உதவுகின்ற அதேவேளையில் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய வள அபிவிருத்தி திட்டமிடல் மீது கவனம் செலுத்துகின்றது. அமைச்சு தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் அபிவிருத்தி முன்மொழிவுகள் மீது தாக்கமேற்படுத்துகின்ற சமூக, சூழலியல் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட விடயங்களை அடையாளம் காண்கின்ற, எதிர்வு கூர்கின்ற, மதிப்பீடுசெய்கின்ற மற்றும் திட்டமிடுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. விருத்திசெய்யப்படுகின்ற எண்ணக்கருவானது அனைத்து நடவடிக்கைகளும் சிறந்தமுறையில் திட்டமிடப்படுவதையும் இங்கு வாழ்கின்ற அனைத்து மக்களின் நல்வாழ்வையும் உறுதிப்படுத்துகின்றது.

மாநகர நகரம் உலகின் மிகச் சிறந்த நகரங்களுடன் ஒப்பிடக்கூடிய தரத்தில் வடிவமைக்கப்படுகின்றது. இது உலகத்தின் தரமான முதலீட்டாளர்களைக் கவர்வதோடு அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி நடவடிக்கைமுறையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கின்றது. சர்வதேச சமூகம் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு உலக சந்தை சூழலைக் கொண்டுவருகிறது. அத்துடன், பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதோடு சர்வதேச தரத்திலான உயர்ந்த சம்பளம் பெறுவதற்கான சந்தர்ப்பமும் கிட்டுகிறது.

 

FaLang translation system by Faboba