We are under development

hon-lasanthaகௌரவ. லசந்த அழகியவன்ன
மாநகர மற்றும் மேல்மகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர்

இலங்கை சமூக பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதனூடாக ஆசியாவின் பொருளாதார மையமாக இருப்பதற்கு எண்ணியுள்ளது. இதை அடைவதற்கு, நாம் உலக ரீதியில் போட்டியிடக்கூடியதாக இருக்க வேண்டும். அத்துடன், நாம் முன்னேறுவதற்கு நகரமயமாக்கலும் நகர சமூகமும் இன்றியமையாத தேவை என்பதை இலங்கை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ளுகிறது.

நகரமயமாக்கல் என்பது மக்கள் நேயம்கொண்ட அபூர்வமான நடவடிக்கைகளை  ஆக்கபூர்வமாக விரிவுபடுத்துவதற்கான தேவைகளை அடையாளம் காண்பதற்கான ஒரு நடவடிக்கைமுறையாகும். தற்பொழுது நகர வாழ்க்கையில் பரவலாகக் காணப்படுகின்ற சனநெரிசல், மாசடைதல், அழகுகெடுதல், அமைதியற்ற புறச்சூழல் போன்றவற்றிக்கு முரணாக சரியான மூலோபாயம் மற்றும் அறிவுபூர்வமான முகாமைத்துவம் என்பவற்றுடன் நகரமயமாக்கல் மக்களின் வாழ்க்கையில் பாரிய ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.

நகரமயமாக்கல் சூழலியல், பௌதிகம் மற்றும் சமூக அமைப்புகள் என்பவற்றுடன் ஒன்றோடு ஒன்று இணைந்த சவால்கள் தொடரொன்றுக்குக் காரணமாய் அமைகிறது. இதில் பாதைகள் மற்றும் புகையிரத வலைப்பின்னல்கள், பாலங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், நீர் வழங்கல், வடிகாலமைப்பு முறைமைகள், கழிவு முகாமைத்துவ முறைமைகள், தொலை தொடர்பு வலையமைப்பு, மின்கம்பிகள் மற்றும் சகலவிதமான கட்டிடங்கள் என்பவை அடங்குகின்றன.

எம் எதிரே பெரும் சவால்கள் இருக்கின்றன. கடுமையான உழைப்பு முறையான திட்டமிடல் என்பவற்றின் ஊடாக எமது அபிலாசைகளையும் இலக்குகளையும் அடையமுடியும் என நான் நம்புகிறேன். 

FaLang translation system by Faboba