hon-pataliகௌரவ. பாட்டலி சம்பிக்க ரணவக்க
மாநகர மற்றும் மேல்மகாண அபிவிருத்தி அமைச்சர்

நவீன உலகில் அபிவிருத்தியில் நகரமயமாக்குவதும் நகர அபிவிருத்தியும் பிரதான பங்கு வகிக்கின்றது. வரலாற்றில் முதல்முறையாக உலக சனத் தொகையில் அரைவாசிக்கு மேல் நகரங்களில் குடியேறியிருக்கின்றன. அத்துடன், தற்பொழுது உலக நகர சனத் தொகை 3.7 பில்லியன் மக்களைக் கொண்டிருக்கிறது. 2050ஆம் ஆண்டளவில் இத்தொகை இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகரங்கள் பொருளாதார வளர்ச்சியினதும் கலாசார அபிவிருத்தியினதும் இயந்திரங்களாக இருக்கின்றன. அத்துடன், அதில் குடியிருக்கின்றவர்களுக்கு எண்ணிலடங்கா நன்மைகளை அளிக்க முடியும். அண்மைக்கால ஆய்வுகளின் பிரகாரம், கிராமப் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் நகரங்கள் பொருளாதார வளர்ச்சியின் உயர்ந்த வீதத்தைப் பதிவுசெய்கின்றன. அதாவது, உலகத்தின் மொத்த சனத் தொகையில் 50மூஐ எடுத்துக்கொண்டால்  உலகத்தின் மொத்த உள்ளூர் உற்பத்தியில் நகரங்கள் 80மூக்குமேல் உற்பத்திசெய்கின்றன.

உலகத்தின் ஏனைய பாகங்களில் மேற்கொள்ளப்படுகின்ற பாரிய அபிவிருத்தி பணிகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் நகர சமூகத்தில் முறையான மாற்றங்களையும் அபிவிருத்தி நடைமுறைகளையும் கொண்டுவருவது அத்தியாவசியமானதாகும். அது அவர்களின் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைப் பேணுகின்ற அதேவேளையில் நகர குடியிருப்பாளர்கள் சமூக பொருளாதார அபிவிருத்தியில் பங்கேற்பதையும் உறுதிப்படுத்தும்.

அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்குள் அபிவிருத்தி மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய மாநகர பிரதேசமாக  முழு மேல் மகாணத்தையும்  மாற்றுவதற்காக இந்த அமைப்பில் புதிய மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு உருவாக்கப்பட்டது. இதை அடைவதற்கு, உத்தேச நகர அபிவிருத்தி மற்றும் மாநகர முன்னெடுப்பு, கட்டிடங்களை நிர்மாணித்தல் அல்லது அந்நிய நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்துதல் என்ற கொள்கைகளுக்கு அப்பால் விரிவடைய வேண்டும். அத்துடன் அனைத்து பிரசைகளினதும் சமூக, கலாசார, பொருளாதார மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கு உதவுகின்ற சமநிலையான சூழல் நேயம்கொண்ட முறைமை உருவாக்கப்படும். மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையை சமர்ப்பிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 

FaLang translation system by Faboba