தொலை நோக்கு

"மக்களின் பொருளாதார மற்றும் ஆன்மீக நல்வாழ்க்கையை உறுதிப்படுத்துகிற இயற்கையுடன் ஐக்கியமாக செழிப்புடன் நிலைபேறாக வாழ்கின்ற நகர வாழ்க்கை".

செயற்பணி

"நாட்டின் மூலோபாய அமைவிடங்களில் சிறந்த வடிவமைப்பு, பொறியியல், திறன்மிக்க நகர திட்டமிடல், சிறந்த தரமான தொழில்நுட்பம் மற்றும் உலகத்தின் சிறந்த செயற்பாடுகளுடன் நன்றாக வடிவமைக்கப்பட்ட, பசுமையான, நேர்த்தியான நகர குடியமர்த்தல் ஊடாக இலங்கைப் பிரசைகளின் பொருளாதார வளத்தையும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துதல்".

நோக்கம்

இலங்கையின் நகர சமூகத்தில் ஒழுங்குமுறையான மாற்றங்களை ஏற்படுத்துவதும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதும் அமைச்சின் பிரதான நோக்கமாகும். அத்துடன் இந்த செயற்பாடு நகர பிரதேசங்களில் குடியிருப்பவர்களின் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைப் பேணுகின்ற அதேவேளையில் அவர்கள் நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்திப் பணிகளில் பங்கேற்பதையும் உறுதிப்படுத்தும். இது இலங்கையை ஆசியாவின் வர்த்தக, கப்பற் போக்குவரத்து, விமான போக்குவரத்து என்பவற்றில் பிரதான இடமாக இருப்பதற்கு வழியமைக்கும்.

இந்த அமைப்பில் அடுத்த ஐந்து வருடங்களுக்குள் முழு மேல்மாகாணத்தையும் சகல துறைகளிலும் அனைத்தையும் உள்ளடக்கிய அபிவிருத்தியடைந்த மாநகர நிலைக்கு மாற்றுவதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. சமூக பொருளாதார மற்றும் உயிரியல்-புவிவியல்-பௌதிக என்ற நிலைகளை அடிப்படையாகக்கொண்டு மேல்மாகாண மாநகர பிராந்தியத்தில் பாரியளவிலான திட்டமிடல் அமைச்சின் விடயப்பரப்பின் கீழ் வேலைகளின் பரப்பெல்லையில் முதன்மையாக சேர்கிறது.

மேல்மாகாண மாநகர அபிவிருத்தி இலங்கையில் நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடிய, உறுதியாக  ஸ்தாபிக்கப்பட்ட, நிலைபேறான எதிர்கால நகர நடவடிக்கைகளின் மைய நிலையமாக இருக்கும். மேலும், நாட்டின் மூலோபாய அமைவிடங்களில் நேர்;த்தியான நகர குடியிருப்புகளை வடிவமைக்கும்போது, நகரமயமாக்கலில் பிரதானமாக இருக்கின்ற பிரச்சினைகளான குப்பைகள், சேரி வீடுகள், வலுசக்தி, போக்குவரத்து நெரிசல், சூழலியல் மற்றும் வாழ்வாதாரம் போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் தீர்வு தேடும்.

FaLang translation system by Faboba